STHANAROHANAM UTSAVAM(STUDENT COUNCIL INVESTITURE CEREMONY)(28.06.2023)

AMRITA VIDYALAYAM SENIOR SECONDARY, TIRPPUR.

Sthana Arohana Utsavam was celebrated at Amrita Vidyalayam Senior Secondary School,
Tirupur with great enthusiasm. Shri Raju Executive Vice President Technical Janatics India
Private Limited, Coimbatore. Presided over the function. The programme was inaugurated
symbolically by lighting the lamp followed by Amma’s Dhyana Slokah . Likhitha of Grade V
accorded a cordial welcome to the chief guest Shri Raju Executive Vice President Technical
Janatics India Private Limited,Coimbatore. Akila. New leaders were appointed for different
posts. Teachers took oath as house incharges Sakthivisakan of grade XII gave the speech on the
previous year’s achievements. Nagavishwa of grade 11 the newly elected head boy prosed the
plans for the current academic year. Principal addressed the gathering and the chief guest’s
motivational speech on the role of a leader inspired everyone. Vote of thanks was proposed by
Shivani of calss XII . The programme ended successfully with Shanthi mantra.

அமிர்த வித்யாலயம் சீனியர் செகண்டரி – திருப்பூர்

ஸ்தான ஆரோகண உற்சவம்

திருப்பூர் அமிர்த வித்யாலயம் சீனியர் செகண்டரி பள்ளியில் ஸ்தான ஆரோகண உற்சவம் (28.6.23) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீ ராஜு நிர்வாக துணைத் தலைவர் அவர்கள் (டெக்னிக்கல் ஜனடிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், கோயம்புத்தூர்) விழாவிற்கு தலைமைத் தாங்கி ,தீபம் ஏற்றி விழாவினை இனிதே தொடங்கி வைத்தார். அன்னையின் தியான ஸ்லோகத்தை தொடர்ந்து, ஐந்தாம் வகுப்பைச் சேர்ந்த லிகிதா அனைவரையும் வரவேற்று அன்பான வரவேற்புரை அளித்தார். தலைமை விருந்தினரான ஸ்ரீ ராஜு அவர்களின் பங்கு பற்றி, முதல்வர் திரு.வித்யாசங்கர் ஐயா அவர்களின் ஊக்கமூட்டும் உரை அனைவரையும் உற்சாகப்படுத்தியது. முந்தைய ஆண்டு சாதனைகள் குறித்து பன்னிரெண்டாம் வகுப்பைச் சேர்ந்த சக்திவிசாகன்,அக்ஷயா மற்றும் ஆறாம் வகுப்பைச் சேர்ந்த அகிலா உரை நிகழ்த்தினார்கள். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான, பல்வேறு பதவிகளுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 11ஆம் வகுப்பைச் சேர்ந்த நாகவிஷ்வா (தலைமை மாணவன்) மற்றும் ஶ்ரீமுகி (தலைமை மாணவி) நடப்பு கல்வியாண்டுக்கான திட்டங்களைப் பற்றி உரை நிகழ்த்தினார்கள். நன்றியுரையை பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஷிவானி முன்மொழிந்தார். சாந்தி மந்திரத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *